இரட்டை குடிமக்களுக்கான கதவுகளை மூடுகிறது: 21வது திருத்தம் நாளை பாராளுமன்றத்தில்

Prathees
2 years ago
இரட்டை குடிமக்களுக்கான கதவுகளை மூடுகிறது:  21வது திருத்தம் நாளை  பாராளுமன்றத்தில்

நாட்டின் எதிர்கால நல்வாழ்வைப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்காக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட முக்கியமான கட்டளைகள் அடங்கிய அரசியலமைப்பின் 21வது திருத்தம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை (23) அமைச்சரவையில் முன்வைத்து பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (20) தெரிவித்தார்.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று தற்போது நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமையாளர்களின் ஆசனங்களை இல்லாதொழிப்பது என நீதியமைச்சில் நேற்று (20) நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்லுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பேராசை பிடித்த பல அரசியல் வாதிகளும் குடும்ப அரசியலும் நாட்டை இவ்வாறான பாதாளத்தில் தள்ளிவிட்டது என்றும் இளைஞர் சமூகத்தின் குரலுக்கு செவிசாய்க்காத அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.