நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 30 சதவீத தொழிற்சாலைகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் அபாயம்

Prathees
2 years ago
நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 30 சதவீத தொழிற்சாலைகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக 30 வீதமான ஆடைத் தொழிற்சாலைகள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டு, அந்தத் தொழிற்சாலைகளின் தலைவர்கள் வேறு நாடுகளில் அமைக்கத் தயாராகி வருவதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி பொருட்களை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை, மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றனவே இதற்கு காரணம் என அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நடவடிக்கைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.