அவசர அறுவை சிகிச்சைக்கு வரும் மருத்துவர்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை

Prathees
2 years ago
அவசர அறுவை சிகிச்சைக்கு வரும் மருத்துவர்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை

எரிபொருள் நெருக்கடி காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு விரைந்து செல்வதில் சத்திரசிகிச்சையாளர்கள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எனவே, வைத்தியர்களுக்கு பெற்றோல் பெற்றுக் கொள்வதற்கான குறிப்பிட்ட திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் தற்போது வைத்தியர்களுக்கு டீசல் வழங்கும் முறை இருந்த போதிலும், பெரும்பான்மையானவர்கள் பெற்றோல் வாகனங்களையே தமது கடமைகளுக்கு பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக பொதுமக்களுடன் வரிசையில் நின்று வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எரிபொருள் வரிசையில் வைத்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், பதற்றமான சூழ்நிலை காரணமாக அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 வைத்தியசாலைகள் மருந்துகளை பெற்றுக் கொண்டாலும், வைத்தியர்களால் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விரைவாக சென்றடைய முடியாவிட்டால் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவது பிரச்சினையாக மாறியுள்ளதாக விசேட வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.