புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்: தி.சரவணபவன்

#SriLanka #Batticaloa #Lanka4
Shana
2 years ago
புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்: தி.சரவணபவன்

மட்டக்களப்பு மாநகரசபையிடம் பல முதலீட்டுத் திட்டங்கள் இருக்கிறநிலையில், பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கவிரும்பும் புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் புலம்பெயர் தமிழர்களும் பங்காளிகளாக மாறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சூரியசக்தி மின்னுற்பத்தி மூலம் மின்சாரத்தினை பெறும் வகையிலான சூரிய மின்சக்தி கலங்களைப் பொருத்தும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

உலக வங்கியின் சுமார் 80இலட்சம் ரூபா நிதியுதவியுடன் இந்த சூரிய மின்சக்தி கலங்கள் பெரும் பணிகள் இன்று மட்டக்களப்பு பொதுச்சந்தையில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான சிவம்பாக்கிநாதன், சசிகலா விஜயதேவா, ஜெயச்சந்திரன், து.மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈட்டும் வகையில் இந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பல திட்டங்கள் உலக வங்கி மற்றும் மாநகரசபையின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.