உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐ நா உதவி: ரணிலுக்கு வழங்கிய வாக்குறுதி

Mayoorikka
2 years ago
உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐ நா உதவி: ரணிலுக்கு வழங்கிய  வாக்குறுதி

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் நெருக்கடியை சமாளிக்க உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச உதவியை நாடுவதற்கு தேவையான உதவிகளையும் வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்கள் மூன்று வேளை உணவு உண்ணக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.