நாட்டின் பதில் நிதிமையச்சராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச!

#President #Gotabaya Rajapaksa #Lanka4
Reha
2 years ago
நாட்டின் பதில் நிதிமையச்சராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச!

அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி அமைச்சராக செயற்படுவார் என இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இதுவரை நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பதவி இன்னும் வெற்றிடமாகவே இருப்பதாக தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பதவியை ஏற்க மறுத்துள்ள போதிலும், நாட்டின் நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.