தூதரகங்கள் மூலம் வருமானம் ஈட்டும் இலங்கை - வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள்

Nila
2 years ago
தூதரகங்கள் மூலம் வருமானம் ஈட்டும் இலங்கை - வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள்

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தூதரங்கள் மூலம் 3,221 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூதரகங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் பெருமளவு வருமானத்தை ஈட்டினாலும் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் நேர்முக தேர்விற்கு போதுமான நேரத்தை ஒதுக்காத காரணத்தினால் தூதரக உதவிகளை பெறுவோர் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

அதற்கமைய, அண்மைய நாட்களாக பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இலங்கை மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் கடவுசீட்டிற்கு அல்லது தூதரக உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வெளிநாட்டு பயணங்கள் தாமதமடைந்து வருகின்றனர்.

விரைவு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது, ஓய்வூதியம் தொடர்பான தேவைகளுக்கான வாழ்க்கைச் சான்றிதழ்கள், விசாவுக்கான விண்ணப்பம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பம் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து தூதரக சேவைகளுக்கும் முன் பதிவு செய்ய வேண்டும் என தூதரக இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய விடயங்களுக்கு முன்பதிவு செய்தாலும் ஒரு மாதத்தின் பின்னரே அதிகாரிகளின் உதவிகளை பெறப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெளிநாடு செல்லும் பணியாளர்கள் உள்ளிட்ட மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாக குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன் இந்த பணியாளர்கள் ஊடாக நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணிகள் கிடைக்காமல் போவதாகவும் தெரியவந்துள்ளது.