அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக அறிவிப்பு

#SriLanka #government #Employees
அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக அறிவிப்பு

இன்று முதல் அரச உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் சம்பளக் குறைப்பு எதுவும் செய்யப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

வளப்பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களை குறைக்கும் வகையில் பொது நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மக்களுக்கு செய்து வரும் பொது சேவைகள் தொடர வேண்டும். குறைந்தபட்ச எண்ணிக்கையான அதிகாரிகளை அழைத்து அந்தச் சேவைகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பு வழமை போன்று இடம் பெற்று வருவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார்.