விவசாயம் செய்யக்கூடிய காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் பணிப்புரை!

Prabha Praneetha
2 years ago
விவசாயம் செய்யக்கூடிய காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் பணிப்புரை!

உணவு நெருக்கடிக்கு தீர்வாக நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவு நெருக்கடி தொடர்பாக விவசாயத் துறை பிரதிநிதிகளை பிரதமர் இன்று  சந்தித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் போது, ​​விவசாய பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய விவசாய வழங்கல் சட்டம் என பெயரிடப்பட்ட புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

உக்ரேனில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக உலகம் கோதுமை மற்றும் உரப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், தட்டுப்பாடு அதிகரிக்கும் போது ​​உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் என்றும் விளக்கினார்.

நாடு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் அதை மீட்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!