சஷீ வீரவங்சவை மேன்முறையீட்டு கைதியாக சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு கோரிக்கை

Mayoorikka
2 years ago
சஷீ வீரவங்சவை  மேன்முறையீட்டு கைதியாக சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு கோரிக்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு போலியான தகவல்கள் வழங்கி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷீ வீரவங்ச, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, தன்னுடைய சட்டத்தரணிகளின் ஊடாக, மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கொ​ழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்கானாவலவிடமே, இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த கோரிக்கையின் மீது அவதானம் செலுத்திய மேலதிக நீதவான் இந்த வழங்கை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் ஒத்திவைப்பதற்கான கட்டளையை பிறப்பித்தார்.

இங்கு பிரதிவாதி சஷீ வீரவங்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம், தங்களுடைய வாடிக்கையாளரை, மேன்முறையீட்டு கைதியாக சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தன் பின்னர், ​கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் இருந்து இன்று (27) மாலை 5 மணியளவில் சிறைச்சாலைகள் பஸ்ஸில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சஷீ வீரவன்ச அழைத்துச் செல்லப்பட்டார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!