எரிபொருள் மோசடி: வருகின்றது புதிய செயலி

Mayoorikka
2 years ago
எரிபொருள் மோசடி: வருகின்றது புதிய செயலி

எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வாகனங்களின் இலக்கத்தை செயலியில் பதிவேற்றியதன் பின்னர், குறித்த வாகனத்திற்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருளின் அளவு, எரிபொருள் நிரப்பிய திகதி, நேரம், ஏற்கனவே எரிபொருள் நிரப்பிய நிலையம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த செயலி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பொலிஸாரால் கண்காணிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!