அவுஸ்திரேலியாவில் 4 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை குடும்பம் விடுவிக்கப்பட்டது!

Nila
2 years ago
அவுஸ்திரேலியாவில் 4 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை குடும்பம் விடுவிக்கப்பட்டது!

அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை குடும்பம் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

 
நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முருகப்பன் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் அடங்கிய குடும்பமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கைக்கு எதிராக செயற்பட்டதாக கூறி முருகப்பன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு அவுஸ்திரேலிய மக்களினால் நீண்ட காலமாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதமர் அந்தனி அல்பானிஸ் இந்த குடும்பத்திற்கு விசேட அனுமதியினை வழங்கியுள்ளார்.
 
கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர்கள் குவின்ஸ்லந்தில் உள்ள பிலோயிலா நகரத்தில் தற்காலியகமாக வசிப்பதற்கும் பணியாற்றுவதற்கும் ஏற்ற வகையிலான நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய குடிவரவு சட்டத்திற்கு அமைய புகலிட கோரிக்கை மனுவினை நிராகரித்து காலவரையற்ற முறையில் புகலிடம் கோருவோரை தடுத்து வைக்க முடியும்.
 
நீண்ட காலம் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இப்படியான செயல்பாடுகள், அவுஸ்திரேலிய சமூகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, தற்காலிய வதிவிட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள இந்த குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!