முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Prabha Praneetha
4 years ago
முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதைமுன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு ‘கலைத்துறை வித்தகர்’ விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று கருணாநிதிக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4