பணம் அச்சிடுவது தொடர்பில் ரணிலின் யோசனை!

Prabha Praneetha
2 years ago
பணம் அச்சிடுவது தொடர்பில் ரணிலின் யோசனை!

ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன  தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும்  விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!