சிறுவர்களே அவதானம் - புதிதாக பரவும் கொடிய வைரஸ்

Kanimoli
3 years ago
சிறுவர்களே அவதானம் - புதிதாக பரவும் கொடிய வைரஸ்

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாராசிட்டமால் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது கொடிய நோயல்ல என்றும், 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!