இறந்தும் இருவரை வாழவைத்த சிறுவன்

Kanimoli
1 year ago
இறந்தும் இருவரை வாழவைத்த சிறுவன்

அனுராதபுரத்தில் பிரதேசம் ஒன்றை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கடந்த மே 31ஆம் திகதி விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், இறந்த மாணவனின் கண்களை தானம் செய்ய வைத்தியசாலையில் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையை பெற்றனர்.

வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் அநுராதபுரம் கிளையில் உள்ள கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்தார்.