ஜோ பைடன் வீட்டின் மீது பறந்த விமானம் - பரபரப்பில் அதிகாரிகள்

#America #President
Prasu
2 years ago
ஜோ பைடன் வீட்டின் மீது பறந்த  விமானம் - பரபரப்பில் அதிகாரிகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோ பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ (120 மைல்) தொலைவில் உள்ள டெலாவேரின் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டின் மீது தடைசெய்யப்பட்ட வான்வெளியில் ஒரு சிறிய தனியார் விமானம் ஒன்று பறந்தது. இதனால், அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியை பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

இருப்பினும், தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. அதிபர் ஜோ பைடனின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. சூழ்நிலை சரியானப் பிறகு பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தங்கள் வீட்டிற்கு திரும்பினர். 

மேலும், அதிபரை பாதுகாக்கும் ரசசிய சேவை, தவறுதலாக விமானத்தை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அமெரிக்க ரகசிய சேவை விமானியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.