அமைச்சரவைக் கூட்டம் இன்று
#SriLanka
#Meeting
#Lanka4
Shana
2 years ago

இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று அமைச்சரவையில் பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதில் முக்கியமானது அரசியலமைப்பின் 21வது திருத்தமாகும்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
மேலும், மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.



