மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் பசில் - குமார் குணரட்னம் தெரிவிப்பு!

Nila
2 years ago
மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் பசில் - குமார் குணரட்னம் தெரிவிப்பு!

நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்கான பின்னணியில் பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்துள்ளதாக முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் பசில் ராஜபக்ச இரகசியமாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க இந்திய றோ மற்றும் அமெரிக்க சிஐஏ அமைப்பு செயற்பாட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மீறி எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தி ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து கடந்த மாதம் 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.

இந்நிலையில், பிரதமர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!