வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை

Prabha Praneetha
2 years ago
வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் வெதுப்பக உரிமையாளர்கள் 12 சதவீத வற்(Vat) வரி செலுத்த வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வற் வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு பனிஸின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து வெதுப்பக உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியை செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், வெதுப்பக உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!