இலங்கையின் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றிகள் தெரிவித்த ரஷ்யா!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நேற்று மொஸ்கோ நோக்கி பயணித்திருந்தது,
கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி வழங்கிய தடையுத்தரவை இடைநிறுத்தியதன் மூலம் குறித்த விமானம் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மொஸ்கோ நோக்கிய பயணித்திருந்தது,
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சு நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தது,
விமானம் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது,
ரஷ்யாவின் எரோப்லொட் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ் யூ 289 விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுத்தமைக்கு இலங்கைக்கு ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சு தமது நன்றிகளை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நேற்று மொஸ்கோ நோக்கி பயணித்திருந்தது,
கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி வழங்கிய தடையுத்தரவை இடைநிறுத்தியதன் மூலம் குறித்த விமானம் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மொஸ்கோ நோக்கிய பயணித்திருந்தது,
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சு நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தது,
விமானம் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.