695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று

Reha
2 years ago
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

குறித்த குறைநிரப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதற்கு அரச நிதி பற்றிய குழுவின் அனுமதி நேற்று வழங்கப்பட்டது.

குறித்த 695 பில்லியன் ரூபாவில் 395 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளாகும்.

அத்துடன் எஞ்சிய 300 பில்லியன் ரூபா மூலதன செலவுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிதி பற்றிய குழு நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று கூடியதோடு, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, குறைநிரப்பு பிரேரணையின் ஊடாக வழங்க எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!