நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டம்

Kanimoli
2 years ago
 நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டம்

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் இராஜினாமாவைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் பதவிக் காலத்திற்கு நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய வங்கியின் நம்பகத்தன்மையையும் தொழில் நற்பெயரையும் பேணிக் கொண்டு இந்த தருணத்தில் செயற்படும் திறன் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!