மெக்சிகோவில் 5 பள்ளி மாணவ-மாணவிகள் மர்ம நபரால் சுட்டுக்கொலை

#America #Death
Prasu
4 years ago
மெக்சிகோவில் 5 பள்ளி மாணவ-மாணவிகள் மர்ம நபரால்  சுட்டுக்கொலை

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்களை குருவிகளை சுடுவது போல மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வருகிறது. இதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்கும். 

மெக்சிகோ நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 5 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 3 பேர் மாணவர்கள் மற்றும் 2 பேர் மாணவிகள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகள். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை மெக்சிகோ போலீசார் தேடி வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4