சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் -முன்னாள் நிதி அமைச்சர்

Nila
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் -முன்னாள் நிதி அமைச்சர்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி கணித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் சர்வதேச ஆதரவின் ஊடாக மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து இலங்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களும் சாதகமாகவே இருந்ததாக தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிதி மற்றும் சட்ட நிபுணர்களை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைக்கும் என நம்புவதாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.

இலங்கையை உறுப்பு நாடாக பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!