இலங்கையில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Nila
2 years ago
.jpg)
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை கருத்திற்க் கொண்டு பாடசாலை நாட்களை மட்டுப்படுத்த கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சரை சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
பலருக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாததால், எரிபொருள் நெருக்கடி மாணவர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



