தேசபந்து தென்னக்கோனின் இடமாற்றம்

Kanimoli
2 years ago
தேசபந்து தென்னக்கோனின் இடமாற்றம்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இடமாற்றம் தொடர்பான பரிந்துரையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது சேவைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2022 மே 9 ஆம் திகதி அமைதியான போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்காக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு 2022 மே 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அண்மையில் கோட்டை நீதவான் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டிருந்தார்.

இதனையடுத்தே சட்டமா அதிபரின் பணிப்புரை மற்றும் நீதிமன்ற கட்டளைகளின் அடிப்படையில் பரிந்துரைகளை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுச் சேவைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனை இடமாற்றம் செய்வது தொடர்பாக பரிந்துரை செய்யுமாறும், தேவைப்பட்டால் ஆரம்ப விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!