உக்ரைனுக்கு 22 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி - ஐரோப்பிய ஆணையம்

#Ukraine #Dollar
Prasu
4 years ago
உக்ரைனுக்கு 22 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி - ஐரோப்பிய ஆணையம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவவீரர்கள் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தது. இதில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. 

உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டுவீசி அழித்து வருகிறது. இந்த நிலையில் கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்யப்படை முற்றுகையிட்டு தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பது, உக்ரைனை நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இதனால் போர் தாக்குதல் ஒரு புறம் நடந்து வரும் சூழ்நிலையில், ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி அந்நாட்டின் பொருளாதார சூழலிலும் ரஷ்யா பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமெனில், லட்சக்கணக்கானோர் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். 

இதனிடையில் உக்ரைனால் கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எனவே போரால் சீரழிந்த உக்ரைனில் அதிகரித்து வரக்கூடிய மனிதநேயம் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி (20.5 கோடி யூரோக்கள்) அமெரிக்க டாலர் நிதியுதவியாக வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் செய்திதொடர்பாளர் பலாஜஸ் உஜ்வரி சி.என்.என். செய்தியாளர்களிடம் கூறியதாவது “ஐரோப்பிய ஆணையத்தின் மனிதநேயம் சார்ந்த மொத்த உதவியானது 34.8 கோடி யூரோக்களாக இருக்கிறது. இதில் 1.3 கோடி மால்டோவா நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டுக்கு புலம்பெயரும் மக்களுக்கு ஆதரவான நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். உலகின் முக்கிய உணவு ஏற்றுமதியாளரான உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4