ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது ஈரான் - கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிப்பு!

#SriLanka #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Hormuz
Thamilini
1 month ago
ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது ஈரான் - கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிப்பு!

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முற்பட்ட கப்பல் ஒன்றின் மீது இன்று அதிகாலை ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ

அரபு மொழி இணையதளத்தில் வெளியான அறிக்கையொன்றில், பல கப்பல்கள் "அங்கீகரிக்கப்படாத பாதைகள்" வழியாக ஜலசந்தியைக் கடக்க முயன்றதன் மூலம் "வெளிநாட்டு சக்திகளின் வெளித் தலையீடு" நிகழ்வதை IRGC கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"வெளித் தரப்பினரின் இந்த சட்டவிரோதத் தலையீட்டால் ஏற்பட்ட அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரையிலும், அமெரிக்காவின் பிராந்தியத் தலையீடு நிற்கும் வரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும்," என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய குறித்த ஜலசந்தியில் "எந்தக் கப்பலோ அல்லது கடற்படைக் கலமோ கடந்து செல்ல அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4