இலங்கை சனத்தொகையில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவை!

Nila
2 years ago
இலங்கை சனத்தொகையில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவை!

இலங்கையர்களில் 22 வீதம் அல்லது 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை பல காரணிகள் பாதித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த வருடம் இரசாயன உரங்கள் இன்மையால் விளைச்சல் 40 தொடக்கம் 50 வீதம் வரை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, உலக உணவுத் திட்டத்தின் பிரதானி, விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நேற்றைய தினம் உலக உணவுத் திட்ட பிரதானியுடன் தாம் கலந்துரையாடியதாக, ட்விட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தாம் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், பிரதமர் கூறியுள்ளார்.
 
அதேநேரம், உலக உணவுத் திட்டத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!