பொய்ச் செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதால் 400 மில்லியன் டொலரை இலங்கை இழந்துள்ளது: அமெரிக்க தூதுவர்
Mayoorikka
2 years ago
பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
“எம்.சி.சி உடன்படிக்கை மூலமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளது. இது கிடைத்திருந்தால் இன்று நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் எமது அரசாங்கத்தின் உதவி மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.