தங்கத்துடன் கடலில் மூழ்கிக் கிடக்கும் 3 கப்பல்கள் - யாருக்கு சொந்தமென பலர் சண்டை

Nila
4 years ago
தங்கத்துடன் கடலில் மூழ்கிக் கிடக்கும் 3 கப்பல்கள் - யாருக்கு சொந்தமென பலர் சண்டை

கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான்ஜோஸ் கப்பல் 600 பேருடன் மூழ்கியபோது அக்கப்பலில் இந்திய ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது.

1708-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான்ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் தங்கத்துடன் மூழ்கிய சான்ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக கொலம்பியா அரசு அறிவித்திருந்தது.

ரோசாரியோ தீவுகளுக்கு அருகே கப்பல் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.

ரிடியோலில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கி கிடக்கின்றன. நீலம், பச்சை நிறங்களில் கடலின் அடியில் தங்க நாணயங்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கோப்பைகள் சிதறி கிடக்கின்றன.

மேலும் ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் கிடக்கிறது. இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தங்க புதையலுடன் கடலில் மூழ்கிய கப்பல் யாருக்கு சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4