யோசித ராஜபச 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர்

Kanimoli
2 years ago
யோசித ராஜபச 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபசவின் இரண்டாவது மகன் யோசித ராஜபச தனது 34 வயதில், 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களின் சாபத்துடன் யோசித ராஜபச இன்றைய தினம் தனது 34 வயது பிறந்த நாளை கொண்ட கொண்டாடுகின்றார் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளார்.

தனது வயதிற்கு ஏற்ப அவர் 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு வன்முறை சம்பவத்தின் பின்னணியில் யோசித
கடந்த 9ஆம் திகதி அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கலின் பிரதான திட்டங்களை மேற்கொண்டவர் யோசித ராஜபக்ச என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் யோசிதவிடம் வாக்குமூலம் பெறுமவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அனைத்தையும் திட்டமிட்ட யோசித 9ஆம் திகதி அதிகாலை சிங்கப்பூர் ஊடாக மெல்பேர்ன் நகரத்திற்கு சென்ற நிலையில் அங்கிருந்து பெர்த் நகரத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மே மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்த யோசித காணி ஒன்று தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

யோசித தனது முன்னாள் காதலி யஸாரா அபேநாயக்கவுடன் காணி ஒன்றை அப்போதைய காலப்பகுதியில் கொள்வனவு செய்திருந்தார். ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விருப்பம் இல்லாமையினால் காதல் தொடர்பு முடிவுக்கு வந்தது.

8 வருடங்களுக்கு முன்னர் வேறு ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் இருந்த வீட்டில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும் போதை பொருளுக்கு அடிமையான அவரது மகனும் பாதுகாப்பிற்காக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி நாட்டிற்கு வந்த யோசித இரண்டு வாகனங்களில் அடியாட்களுடன் அந்த வீட்டிற்கு சென்று தந்தையையும் மகனையும் வெளியேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும் முன்னாள் இராணுவ அதிகாரி அதற்கு அனுமதி வழங்காமல், 8 வருடங்கள் தங்கிவிட்டால் அது எங்களுக்கு சொந்தமாகி விடும் முடியும் என்றால் சுட்டுக்கொள்ளுங்கள் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சத்தம் கேட்டு அயலவர்கள் வெளியே வந்தவுடன், வந்த வேகத்தில் யோசித உட்பட குழுவினர் அங்கிருந்து வெளியேறுள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!