இலங்கையில் வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நிலைமையை வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை இதனூடாக சீர்செய்ய முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜூலை முதலாவது வாரத்தில் இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் தடையற்ற மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் பாதை முகாமைத்துவம் சாத்தியமற்றதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்துவதற்கான எரிபொருளை சேமித்துக் கொள்கின்றனர். எனவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி உருவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.