இலங்கையில் எரிபொருள் வரிசையில் பதிவான மற்றுமொரு உயிரிழப்பு!
Nila
2 years ago
.jpg)
மதுரங்குளிய எரிபொருள் வரிசையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரங்குளியவில் எரிபொருள் வரிசைக்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, எனினும் அவர் எரிபொருள் வரிசையில் காத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் இன்னும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ளதோடு, நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



