லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் தற்போது தொடர்ச்சியாக மாற்றங்கள்

Kanimoli
2 years ago
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் தற்போது தொடர்ச்சியாக மாற்றங்கள்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் தற்போது தொடர்ச்சியாக மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் 4 நியமனங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெசார ஜயசிங்க பதவி நீக்கல், ரேணுகா பெரேரா நியமனம்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக தெசார ஜயசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தெசார ஜயசிங்கவை நீக்கி நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் செயலாளருக்கு கடந்த ஜனவரி மாதம் 12ம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெசார ஜயசிங்கவை நீக்கிவிட்டு புதிய தலைவராக ரேணுகா பெரேராவை நியமிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் மூலம் பணிப்புரை விடுத்திருந்தார்.

பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ எரிவாயு நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி காலை விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, லிட்ரோ நிறுவனத்தின் தலைவரை பதவி விலக்கும் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தெசார ஜயசிங்க கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு அவர் கடிதம் மூலம் அவர் அறிவித்திருந்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விஜித ஹேரத் லிட்ரோ நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தனது பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதாக கடந்த பத்தாம் திகதியளவில் அறிவித்திருந்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த தேஷார ஜயசிங்க பதவி விலகியதையடுத்து, நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருந்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ நிறுவனத்தின் தற்காலிக தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அவர் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளதுடன், என்ற போதும் காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைவர் பதவியில் அவர் தொடர்ந்தும் நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நாளைமறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!