ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் ஜீ.எல். பீரிஸ்

Mayoorikka
2 years ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் ஜீ.எல். பீரிஸ்

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
  
மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!