பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை - பிரதமர்

Kanimoli
2 years ago
பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை - பிரதமர்

   இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் , தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாக தெரிவித்த பிரதமர் , இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்வதாகவும் விரைவில் அதை நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்றத்தை மேற்கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கையை சீனா நிராகரிப்பதாக தெரிவித்த நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மின்சார திருத்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தாகவும் 21ஆவது திருத்தத்தை படிப்பதற்கு அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் விரும்பியதாகம் குறிப்பிட்டார்.

எனினும் சில முன்னாள் அமைச்சர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பதிவியை ஏற்காமையால் அதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்ய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிணை எடுப்பதை அரசாங்கம் நாடுகிறது என்றாலும், நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நன்கொடையாளர் முகவர் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!