உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த 2-வது ராணியாக பிரிட்டன் அரசி சாதனை

Prasu
2 years ago
உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த 2-வது ராணியாக பிரிட்டன் அரசி சாதனை

பிரிட்டன் நாட்டின் அரசியாக ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி புரிந்து வருகிறார். இவர் ஆட்சியில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிளாட்டினம் ஜூப்லி விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த 2-வது ராணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 1952-ஆம் ஆண்டு  பிரிட்டன் நாட்டின் ராணியாக தன்னுடைய 25 வயதில் முடிசூடிக் கொண்டார். 

இவர் ராணி ஆக பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரிட்டன் நாட்டை 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த ஒரே ராணி என்ற பெருமையை பெற்றுள்ளார். அதன்பிறகு தாய்லாந்தின் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக ஆட்சி புரிந்தார்.

இதேப்போன்று விக்டோரியா மகாராணி பிரிட்டனை 63 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இதையெல்லாம் தற்போது ராணி இரண்டாம் எலிசபெத் முறியடித்து உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த 2-வது ராணி என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இவர் பிரிட்டன் நாட்டின் ராணியாக இருந்தாலும், 16 நாடுகளின் அரசியல் சட்டப்படி இவர் அரசியாக இருக்கிறார். இது தவிர பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னராகவும் பதவி வகிக்கிறார். 

மேலும் பிரான்ஸ் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர் 14-ம் லூயி 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி புரிந்து உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த மன்னர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!