கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் பிரதான உணவுகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்!
Nila
2 years ago

கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் தங்களது பிரதான உணவுகளை பெற்றுக் கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
60 சதவீதமான உணவகங்கள் மூடப்பபட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல இடங்களில் ஃப்ரைட் ரைஸ் மாத்திரம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சோறு பொதி ஒன்றுக்கான செலவு அதிகரித்துள்ளமையினால் உணவக உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.
இதேவேளை, உணவகங்களில் சிறிய உணவுகளுக்கான விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரச பணியாளர்கள் தங்களவு வீடுகளில் இருந்து உணவுகளை கொண்டு வருமாறு உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



