அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி

Kanimoli
2 years ago
 அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி

 அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அதனை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அங்கப்போர் தற்காப்பு சண்டை கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும் அந்த தடை நீக்கத்திற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

இதனால், வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பான யோசனையை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அமைச்சவையில் முன்வைத்திருந்ததுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அங்கப்போர் என்பது இலங்கையின் தற்காப்பு சண்டை கலையாகும். இந்த தற்காப்பு சண்டை கலை அன்றைய அரச வம்சத்தினர், பிரபுக்கள் பயிலும் கலையாக இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் கண்டி இராஜ்ஜியம் பிரித்தானியரின் காலனித்துவத்திற்கு உட்பட்ட போது, இந்த கலை தடை செய்யப்பட்டுள்ளதுடன் காலப் போக்கில் அது அழிந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சிங்களத்தில் அங்கம்பெர எனக் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!