உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால் ஐரோப்பாவை அழித்து விடுவோம்! மீண்டும் ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

Nila
2 years ago
உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால் ஐரோப்பாவை அழித்து விடுவோம்! மீண்டும் ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால் ஐரோப்பாவே காணாமல் போய்விடும், அதாவது ஐரோப்பாவையே அழித்துவிடுவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.

புடின் புடாபெஸ்ட் ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்றும், அதனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்குவது நியாயமானது என்றும் போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான Radoslaw Sikorski கூறியுள்ளமை ரஷ்யாவின் கோபத்தை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால், ஐரோப்பாவையே காணாமல் போகச்செய்துவிடுவோம், ஐரோப்பாவின் இதயத்தில் ஒரு அணுசக்தி மோதல் ஏற்படலாம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

Sikorskiஐரோப்பாவின் மையத்தில் அணுசக்தி மோதலைத் தூண்டுகிறார். உக்ரைன் அல்லது போலந்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அவருடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், இந்த நாடுகளும் ஐரோப்பாவும் மறைந்துவிடும். அவர் ஒரு மனநல மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!