தென் கொரியா எல்லையில் பீரங்கி குண்டு சோதனை நடாத்திய வடகொரியா

#NorthKorea #SouthKorea #Missile
Prasu
2 years ago
தென் கொரியா எல்லையில் பீரங்கி குண்டு சோதனை நடாத்திய  வடகொரியா

வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. 

சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது. இந்த நிலையில் தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தென்கொரியா ராணுவம் கூறும்போது, எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இது சில மணி நேரங்கள் நீடித்தது என்று தெரிவித்தது. வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதிக்கு அருகே பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!