கனடா பிரதமருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி

#Canada #PrimeMinister #Covid 19
Prasu
2 years ago
கனடா பிரதமருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,

"எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார வழி காட்டுதல்களை பின்பற்றி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். 

தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன். எனவே நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். 

கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!