ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கை அறிவித்த அரசாங்கம்

#China #Lockdown
Prasu
2 years ago
ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கை அறிவித்த அரசாங்கம்

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. 

மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத நிலையை உருவாக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று சீன அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது. 

ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு விலக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

ஒருவர் மூலம் மற்ற அனைவருக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் பிஜீங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பிஜீங்கில் மீண்டும் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!