குரங்கு அம்மையை சர்வதேச தொற்று நோயாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு!

ஆபிரிக்க நாடுகளில் தோற்றமெடுத்து இப்போது ஐரோப்பிய நாடுகளை தீவிரமாக ஆக்கிரமித்து வரும் குரங்கு அம்மை எனப்படும் சின்னம்மை நோயினை ஒத்த இந்த நோயின் தாக்கம் மற்றும் வீரியம் என்பன வேகம் கொண்டு வருவதாகவும், இது உயிர் அச்சுருத்தல் உள்ள ஒரு நோயாக மாறிக் கொண்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள கணிப்புக்களின் அடிப்படையில், உலகமெங்கும் ஆயிரத்தி அறுநூறு உறுதி செய்யப்பட்ட நோயாளர்களும், ஆயிரத்தி ஐந்நூறு சந்தேகிக்கப்படும் தொற்றாளர்களும் காணப்படுவதாகவும் அதேவேளை, குரங்கம்மை நோயினால் இதுவரை 72 பேர் மரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இந்த தொற்று நோய்யின் பரவும் வேகம் மற்றும் தாக்கும் திறன் என்பன மேலும் அதிகரிப்பதாகவும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்ட குரங்கம்மை நோயின் தாக்கு திறனுக்கும் தற்போது காணப்படுகின்ற குரங்கம்மை நோயின் தாக்கு திறனுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும், மேற்படி வேறுபாடுகள் மோசமான முறையில் திரிபுடுத்தப்பட்டு செல்வதாகவும், மரண எச்சரிக்கை விடுக்கக்கூடிய அளவிற்கு மேற்படி திரிபுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உலக மக்களை மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வாரத்தில் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் கூட்டமர்வில் இந்தொற்று நோய்க்கான மாற்று திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



