தடுப்புக்காவலில் இருந்து வெளியேறிய தமிழ் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலியப் பிரதமர்

Kanimoli
2 years ago
தடுப்புக்காவலில் இருந்து வெளியேறிய தமிழ் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலியப் பிரதமர்

நான்கு வருடங்களுக்கும் மேலாக குடியேற்ற தடுப்புக்காவலில் இருந்து மத்திய குயின்ஸ்லாந்திற்கு கடந்த வாரம் திரும்பிய இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் குடும்பத்தை அவுஸ்திரேலியப் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சந்தித்துள்ளார்.

குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.

நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமரை அவர்கள் கட்டித்தழுவுவதை பார்ப்பது மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது தீர்வு வந்துகொண்டிருக்கின்றது என பிரதமர் உறுதியளித்தார் எனவும் அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!