2 கப்புக்கு மேல் டீ குடிக்காதீர்கள் - பாகிஸ்தான் மந்திரி வேண்டுகோள்

#Pakistan #PrimeMinister
Prasu
2 years ago
2 கப்புக்கு மேல் டீ குடிக்காதீர்கள் - பாகிஸ்தான் மந்திரி வேண்டுகோள்

அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பொதுமக்கள் டீக்குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மந்திரி ஆஷான் இக்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 8000 கோடி ரூபாய் இந்த தேயிலை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் கடன் வாங்கிய தொகையாகும். 

நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் மக்கள் தினம் டீக்குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்துகொள்ள வேண்டும். இவ்வாறு இக்பால் தெரிவித்துள்ளார். இக்பாலின் இந்த கருத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

இதேபோல் அவர், பாகிஸ்தான் வணிகர்கள் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும், அவ்வாறு செய்வது நாம் பெட்ரோல் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என ஏற்கெனவே கூறியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!