குரங்கம்மை நோய் பரவல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்தும் உலக சுகாதார மையம்

#MonkeyPox
Prasu
2 years ago
குரங்கம்மை நோய் பரவல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்தும் உலக சுகாதார மையம்

குரங்கம்மை நோய் தொற்று பரவல் குறித்து, ஜூன் 23ஆம் தேதி அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த குரங்கம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, “குரங்கு நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது. இதன் பாதிப்பு சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசர கமிட்டியை கூட்ட முடிவு செய்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!