உலக வர்த்தக அமைப்பின் மீனவர் மானிய ஒப்பந்தத்திற்கு இந்தியா எதிர்ப்பு

Prasu
2 years ago
உலக வர்த்தக அமைப்பின் மீனவர் மானிய  ஒப்பந்தத்திற்கு இந்தியா எதிர்ப்பு

இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி நிறுத்துவது அவர்களது வாழ்வாதாரம், குடும்பங்களை பாதிக்கும் என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2016 ஆம் ஆண்டு கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் உடைய  மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 9 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 30.77 லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளன.

இந்நிலையில், ஜெனிவாவில் நடக்கும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை நிறுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை நிறுத்துவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடும்பங்களை வறுமையில் தள்ளும்.

எனவே, வளர்ந்த நாடுகளின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடாது,’’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை சார்ந்த  34 மீனவர்கள் ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக மாநாட்டின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் மக்கள்தொகை 112 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!